சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-03-17 17:10 GMT
ராமநாதபுரம், 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தவளைகுளத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 38). விவசாயி. இவர் 6 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

7 ஆண்டு சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

மேலும் செய்திகள்