கட்டிடத்தில் இருந்து தவறிவிழுந்து பெயிண்டர் பலி
கட்டிடத்தில் இருந்து தவறிவிழுந்து பெயிண்டர் பலி
கிருஷ்ணகிரி:
பர்கூர் தாலுகா எம்.சி.பள்ளி அருகே உள்ள வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 32), பெயிண்டர். கடந்த 16-ந் தேதி இவர் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலைக்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உயரமான கட்டிடத்தில் இடத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முரளி இறந்து விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.