காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி;
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பன்னிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 65), விவசாயி. நேற்று காலை 6 மணியளவில் தன் வயலுக்கு சென்றவர் அங்கு எலிகளை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத சின்னக்கண்ணுவை தேடி அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தனர். அங்கு மின்சாரம் தாக்கி சின்னக்கண்ணு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.