திண்டிவனம் பகுதி கோவில்களில் சசிகலா சாமி தரிசனம்

திண்டிவனம் பகுதி கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தாா்.

Update: 2022-03-17 16:55 GMT
மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வந்தார். தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன், மயிலம் முருகன், திருவக்கரை வக்ரகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். இவருடன் இளவரசியும் வந்திருந்தார். முன்னதாக வரும் வழியில் சசிகலாவுக்கு பல இடங்களில் அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்