கிருஷ்ணகிரியில் விபத்து: மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்
கிருஷ்ணகிரியில் விபத்து: மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா அக்ரஹாரம் அருகே உள்ள அவதானப்பட்டி பச்சமுத்து நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 50). இவருடைய மனைவி மங்கம்மாள் (42). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் ஓசூர்-தர்மபுரி சாலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கட்ராமன் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண் முன்னே பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.