திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி
பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கோவிலூாில் உலகளந்த பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.