இறந்து கிடந்த காட்டெருமை

இறந்து கிடந்த காட்டெருமை

Update: 2022-03-17 16:41 GMT
இடிகரை

கோவையை அடுத்த நாயக்கன்பாளையம் மலையடிவார பகுதியில் நேற்று மாலையில் பெரியநாயக்கன்பாளையம் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பெண் காட்டெருமை இறந்து கிடப்பது தெரியவந்தது.

பின்னர் கோவை மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் இன்று காலை முதுமலை வனக்கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார், காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில், பின்னங்கால் குளம்பு பகுதியில் ஏற்பட்ட புண் காரணமாக அதிக தூரம் நடக்க முடியாமலும், சரிவர தீவனம் கிடைக்காமலும் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் காட்டெருமையின் உடற்கூறு பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து குழி தோண்டி உடல் புதைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்