அரசு பஸ்சை வழிமறித்த குட்டியானை
சாடிவயல் பகுதியில் அரசு பஸ்சை குட்டியானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
சாடிவயல் பகுதியில் அரசு பஸ்சை குட்டியானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ்சை வழிமறித்தது
கோவை-சிறுவாணி சாலையில் உள்ள சாடிவயல் பகுதியில் 5 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளப்பதி நோக்கி அரசு பஸ் சென்றது.
அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து சாலைக்கு குட்டியானை ஒன்று வந்தது. தொடர்ந்து அரசுபஸ்சை வழிமறித்து விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை பின்னோக்கி இயக்கினார். மேலும் பயணிகள் பீதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
வீடியோ வைரல்
பின்னர் சிறிது நேரத்தில் குட்டியானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதைத்தொடர்ந்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த காட்சிகளை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள், கோடைகாலம் என்பதால் பகல் நேரங்களிலேயே வர தொடங்கி உள்ளன.