துடியலூர்
துடியலூர் அருகே ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில் ஆனைக்கட்டி அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் வன ஊழியர்கள் இன்று காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காட்டுயானையின் உடலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஆந்த்ராக்ஸ் நோக்கி தாக்கி இறந்ததா? என்பதை கண்டறிய உடற்கூறு பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் கோவை வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.