நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு பலகை

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டது.

Update: 2022-03-17 16:32 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி பகுதிகள் நடைபெறும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு பலகை வைத்தனர். 

மேலும் செய்திகள்