பள்ளிபாளையத்தில் கடைக்காரர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
பள்ளிபாளையத்தில் கடைக்காரர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 63). பலசரக்கு கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (48) என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். குணசேகரன் வீட்டிலும் லட்சுமி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குணசேகர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் செயின், 1¾ பவுன் வளையல் என மொத்தம் 4½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து குணசேகரன் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குணசேகரன் வீட்டில் நகைகளை திருடியது லட்சுமி என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.