ரூ.12 கோடியில் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுமான பணி. வீட்டு வசதிவாரிய இயக்குனர் ஆய்வு
ரூ.12 கோடியில் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுமான பணியை வீட்டு வசதிவாரிய இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பில் 45 ஆயிரம் சதுரடியில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.
அப்போது, கண்காணிப்புப் பொறியாளர் ரவிச்சந்தர், செயற்பொறியாளர்கள் சிவக்குமார், நக்கீரன், உதவி செயற்பொறியாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.