காரிமங்கலம்-பஸ் நிலைய சந்தை திடலில் ரூ.3 கோடியில் வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

காரிமங்கலம் பஸ் நிலைய சந்தை திடலில் ரூ.3 கோடியில் வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-03-17 16:22 GMT
காரிமங்கலம்:-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் முருகேசன், துணைத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சியில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர் திட்டப்பணிகள், சாலை வசதி, தெரு விளக்கு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. 
தொடர்ந்து பேரூராட்சியில் நிதி நிலையை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளுதல், ரூ.2 கோடி மதிப்பில் எரிவாயு தகனமேடை பஸ் நிலைய சந்தை திடல் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் உதவி பொறியாளர் முருகன், வார்டு உறுப்பினர்கள் சுரேந்திரன், சதீஷ்குமார், மாதப்பன், ரமேஷ், கீதா, ராதா, சத்தி, ராஜம்மாள், சிவக்குமார், பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்