தடைப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை ரத்னகிரியில் இருந்து விதர்பாவுக்கு மாற்ற வேண்டும்; உத்தவ் தாக்கரேவுக்கு, நிதின் கட்காரி கடிதம்

தடைப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை ரத்னகிரியில் இருந்து விதர்பாவுக்கு மாற்றவேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு, மத்திய மந்திரி நிதின் கட்காரி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-03-17 15:58 GMT
திட்டம் முடக்கம்

கடலோர மாவட்டமான ரத்னகிரி பகுதியில் ஆண்டுக்கு 60 மில்லியன் மெட்ரிக் டன் கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தடைகள் காரணமாக இந்த திட்டம் முடங்கியது. இந்த நிலையில் மத்திய மந்திரி நதின் கட்காரி முடங்கி கிடக்கும் இந்த திட்டத்தை விதர்பா மண்டலத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும் இந்த திட்டம் விதர்பாவுக்கு எப்படி பயனளிக்கும் என்பது குறித்தும் கடிதத்தில் தெளிவாக கூறியுள்ளார். இதுகுறித்து விதர்பா பொருளாதார மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர்கள் கொடுத்த அறிக்கையையும் இணைத்துள்ளார்.

வேலைவாய்ப்பு

இதுபோன்ற பெரிய திட்டத்தின் காரணமாக விதர்பாவில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த கணக்குகளின் படி மாநிலத்திற்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி வரை லாபம் கிடைக்கும் எனறும் நிதின் கட்காரி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்