கெத்தை அணை அருகே பசுமாட்டை கொன்ற புலி

கெத்தை அணை அருகே பசுமாட்டை புலி அடித்து கொன்றது.

Update: 2022-03-17 15:58 GMT
ஊட்டி

மஞ்சூர் அருகே கெத்தை அணையை ஒட்டி ஆறு பகுதியில் மேய்ச்சலில் மாரிச்சாமி என்பவரின் பசுமாடு ஈடுபட்டது. அப்போது மறைந்திருந்த புலி, பசு மாட்டை அடித்து தாக்கியதுடன், கழுத்தில் கடித்து ரத்தத்தை குடித்து கொன்றது. 

பின்னர் புலி வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த குத்தா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

தொடர்ந்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு இறந்த பசு மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலி அடித்து கொன்ற பசுமாடு சினையாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்