வெள்ளகோவில்:
வெள்ளகோவில் கொங்கு நகர் பகுதியில் சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்ட தார் பேரல்கள் சாலையோரத்தில் தாருடன் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதில் மயில் ஒன்று அந்த பேரல் மீது உட்கார்ந்துள்ளது. திறந்த நிலையில் பேரல் இருந்ததால் மயிலின் கால் தாரில் பதிந்து கொண்டது. இதனால் மயிலால் அதில் இருந்து மீள முடியவில்லை. எவ்வளவே முயன்றும் மயிலால் தாரில் இருந்து காலை மீட்க முடியவில்லை. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர், தன்னார்வலர் கச்சேரி வலசு பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் மயிலை உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மயிலை பெற்று வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.