கூலி உயர்வு கேட்டு விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.;

Update:2022-03-17 21:00 IST
போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, சொரக்காய்பேட்டை, பொம்மராஜுபேட்டை, ஆர்.கே. பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ. சத்யா பலமுறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

தீர்வு எட்டப்பட்டது

இந்நிலையில், நேற்று பொதட்டூர்பேட்டை மற்றும் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா தலைமையில் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்க விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த விசைத்தறி நெசவாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்