கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் மேலாண்மை மையம்

திருக்குவளை தாசில்தார் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் மேலாண்மை மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.

Update: 2022-03-17 18:45 GMT
வேளாங்கண்ணி:-

திருக்குவளை தாசில்தார் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் மேலாண்மை மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார். 

கணினி மயம்

தேசிய அளவில் நில ஆவணங்கள் மேலாண்மை மையம் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து நில ஆவண அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் திருக்குவளை தாசில்தார் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் மேலாண்மை மையத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார். 
அப்போது மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சவுந்தர்ராஜன், வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலர் துரைமுருகன், திருக்குவளை தாசில்தார் சிவக்குமார், நில அளவை கோட்ட பராமரிப்பு ஆய்வாளர் சத்தியமூர்த்தி, திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். 

உதவித்தொகை

பின்னர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் என 12 பேருக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் மற்றும் ஒருவருக்கு ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்