ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.

Update: 2022-03-17 18:45 GMT
நாகப்பட்டினம்:-

நாகை வெளிப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் திருவாரூரில் இருந்து காரைக்காலுக்கு சென்ற கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்