2வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
வேலூரில் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
வேலூர்
வேலூர் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரேவதி (30).
இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் அசோக்குமார் ஆம்பூரை சேர்ந்த இந்துமதி (29) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து ரேவதியை அவர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி மற்றும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரேவதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் மற்றும் இந்துமதி ஆகியோரை கைது செய்தனர்.