தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

சின்னமனூர் அருகே தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-17 13:18 GMT
தேனி:

சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). இவர், தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரும், ஊழியர்கள் சிலரும் தியேட்டரில் பணியில் இருந்தனர். 

அப்போது, பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ், குணா உள்பட சிலர் அங்கு வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு படம் பார்க்க வந்தபோது அனுமதி மறுத்ததை குறிப்பிட்ட அவர்கள் தகராறு செய்தனர். 

அப்போது அவர்கள் தியேட்டர் ஊழியர்கள் ராஜாராம், பாண்டியராஜன், கருப்பசாமி, வினித் ஆகியோரை தாக்கினர். அதில் 4 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து ராஜாராம் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில், மனோஜ், குணா, போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக், சுபாஷ், போடியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்