திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-17 13:18 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா பள்ளத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் திருப்பத்தூர் தீயணைப்பு துறையின் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மா.கவிதா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ப.நரசிம்மன் வரவேற்றார்.

 திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஆர்.அசோகன், முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு தீயினால் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து செயல்முறைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 இதில் பள்ளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சி.ராணி சின்னகண்ணு, சி.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் மா.பிரகாசம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்