தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது
தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது
திருப்பூர்,
திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் முத்தணம் பாளையத்திலிருந்து செவந்தாம் பாளையம் செல்லும் வழியில் கடந்த ஒரு மாதங்களாக கூரியர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடத்த 15-ந் தேதி இரவு நிறுவனத்தின் கதவை பாதி திறந்த நிலையில் வைத்து விட்டு தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்த போது நிறுவனத்தில் இருந்த 2 செல்போன், 1 மடிக்கணினி திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் செல்போன் மற்றும் மடிக்கணினியை தட்டான் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் திருடி சென்றது சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.