ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் தீக்குளிப்பு

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் பெட்ரோலை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளித்தார்.;

Update: 2022-03-17 13:02 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 40) துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்துவந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து மாமல்லபுரத்தில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் விக்கி தன்னுடைய மனைவியை எரித்து கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து சில மாதங்களுக்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். பின்னர்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தங்கி தெரு தெருவாக பாட்டில் மற்றும் பழைய பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார். அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி அவருடன் தங்கி இருந்தார். விக்கி அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தவே அவர் தொடர்பை துண்டித்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்கி அளவுக்கதிகமாக மது குடித்து விட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்திருந்த அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அவர் மறுக்கவே அங்கு இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளித்தார். அங்கு இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் செங்கல்பட்டு போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்