கண்டக்டர் மீது தாக்குதல்

அரசு பஸ்களை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.;

Update: 2022-03-17 12:42 GMT
தேனி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சொக்குடையான்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவரும், சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பிரபு என்பவரும் சொக்காணூரனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகின்றனர். 

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும், தனித்தனி பஸ்களில் தேனிக்கு வந்தனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்படுவதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 அப்போது சுபாசை, பிரபு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்