தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-16 22:51 GMT
சாலை புதுப்பிக்கப்படுமா?
 சிவகங்கை மாவட்டம் புதுபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகின்றது. வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும. 
நாய்கள் தொல்லை
 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இருளில் மூழ்கும் துறைமுக பகுதி 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுக பகுதியில் இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மீன் பிடித்து கரை திரும்பும் படகுகள் மற்றும் மீனவர்கள் படகுகளை நிறுத்தி இறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும். 
மணிக்கூண்டு தேவை 
ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக மணிக்கூண்டு ஒன்று அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்