விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-16 22:30 GMT
நாகர்கோவில்:
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரி மாவட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் வன சட்டங்களை நிபுணர் குழுவை வைத்து ஆய்வு செய்ய வேண்டும், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பட்டா விளை நிலங்களை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிப்பு செய்ய வேண்டும், மாறாமலை சாலையை சீரமைத்து பஸ் போக்குவரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க குமரி மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், செண்பகசேகர பிள்ளை, திருத்தமிழ்தேவனார், பாஸ்கர், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---

மேலும் செய்திகள்