நெசவுத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நெசவுத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-16 21:33 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நெசவுத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் நெசவாளர் தெருவில் ஏ.ஐ.டி.யு.சி. தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளன மாநில குழு உறுப்பினர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதி நெசவாளர் சங்க தலைவர் ராஜகுரு, முத்துசாமிபுரம் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெசவு உற்பத்திக்கு தேவையான காடா நூலை உடனே வழங்கவேண்டும். வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ள நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
கூலி உயர்வு 
 நெசவாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு வசதி செய்து தரவேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும்.
 நெசவு தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் முத்துமாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங், அனைத்து இந்திய விவசாய சம்மேளனம் அய்யனா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கணேசமூர்த்தி, ராஜா, ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்