கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து பழனிக்கு இரட்டை மாட்டுவண்டிகளில் தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டன
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து பழனிக்கு இரட்டை மாட்டுவண்டிகளில் தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டன.;
கொடுமுடி
கொடுமுடியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் இருந்து இரட்டை மாட்டு வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து பழனிக்கு செல்வது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பழனியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நெய்க்காரப்பட்டியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் நேற்று கொடுமுடி வந்து தீர்த்தக்காவடி எடுத்து கொண்டு பழனிக்கு சென்றனர்.