அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவினால் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பும் இல்லை. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் திகழ்கிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் 310 பேருக்கு இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 1,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.