பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை
ிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
மேட்டூர்:-
மேச்சேரி அருகே உள்ள கரும்பு சாலையூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 27), லாரி டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர், மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் லாரி டிரைவர் தனசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.