நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு வரி விலக்கு; காங்கிரஸ் வலியுறுத்தல்

நடிகர் புனித் ராஜ்குமார் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.;

Update: 2022-03-16 20:45 GMT
பெங்களூரு:

கர்நாடக அரசு தி காஷ்மீர் பைல்ஸ் என்ற இந்தி படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இந்த நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்' படம் இன்று (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. இதையொட்டி புனித் ராஜ்குமாரின் இந்த படத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள ஜேம்ஸ் படம் நாளை (இன்று) வெளியாகிறது. அந்த படத்தை காண அவரது ரசிகர்கள் உள்பட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதனால் மாநில அரசு அவரது படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்