வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது வழக்கு

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-03-16 20:42 GMT
தா பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் அரசன்கொண்டான் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தம்பிகள் சண்முகம் மற்றும் ரவி. சண்முகத்துக்கும், ரவிக்கும் தங்களது வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அன்பழகன் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த சண்முகம், அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர் புகழேந்தி ஆகியோர் அன்பழகனை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தா.பழூர் போலீசில் அன்பழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில், இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்