விடுதிகள்-பள்ளியில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
விடுதிகள்-பள்ளியில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் கல்லூரி மாணவிகள் விடுதிகள் மற்றும் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வடக்கு) ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், விடுதிகளில் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று கேட்டறிந்ததோடு, அரசு பணியாளர் தேர்வுக்கான மாதிரி கேள்வித்தாள்கள், இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கான மாதிரி கேள்வித்தாள்கள், வேலைவாய்ப்பு துறையின் மூலம் எந்தெந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்த கையேட்டினை வைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பள்ளி வளாகம், அங்கன்வாடியில் குழந்தைகள் படிக்கக்கூடிய பகுதி, சத்துணவு கூடம் மற்றும் கழிவறை ஆகியவை சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமணகோபால், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
்