மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Update: 2022-03-16 20:10 GMT
மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்த பிரிவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புக்கான பாடக்குறிப்புகளை https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பாடங்களை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மற்றும் சனி, ஞாயிறு என 2 பிரிவுகளாக நடக்கிறது. எனவே, பட்டப்படிப்பு முடித்த, மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், டி.என்.பி.எஸ்.சி. பதிவு நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்