கல்லூரி மாணவியிடம் நகை பறித்தவர் கைது

நெல்லையில் கல்லூரி மாணவியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-16 19:20 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் கல்பனா (வயது 19). இவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கல்பனா ஊரில் இருந்து பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி கல்லூரிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கல்பனா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. உடனே கல்பனா திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (44) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்