கரூரில் கொரோனா தொற்று இல்லை
கரூரில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 4 நாட்களாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்த நிலையில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.