கத்தியை காட்டி கணவன்-மனைவியை மிரட்டியவர் கைது
குளித்தலை அருகே கத்தியை காட்டி கணவன்-மனைவியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு அரிசன தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மனைவி மேனகா (வயது 24). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைமணி, தினேஷ் (27) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கலைமணி, தினேஷ் ஆகியோர் மேனகா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கணவன்-மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேனகா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கலைமணியை தேடி வருகின்றனர்.