மது போதையில் தவறி விழுந்தவர் சாவு
மதுபோதையில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
ஈத்தாமொழி,
மதுபோதையில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
சாவு
ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன் முகிலன்விளையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 37), கொத்தனார். இவருடைய மனைவி தங்க மீனாட்சி (34). சம்பவத்தன்று கண்ணன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு பால்கிணற்றான்விளையில் உள்ள தன்னுடைய அக்காள் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கியுள்ளார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.