இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சதீஷ்குமார், மாநில செயலாளர் குமரவேல், சென்னை மண்டல செயலாளர் சத்யமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு நடத்துவது. மாவட்டம் முழுவதும் கூட்டமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பது. பாதை இல்லாத கோவில்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர கோருவது. மின் இணைப்பு இல்லாத கோவில்களுக்கு, மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கூட்டமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.