சிவகங்கை,
சிவகங்கை மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் அபிமன்யு (வயது 45). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அபிமன்யு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அபிமன்யு உடலுக்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்