மாறுதலாகி செல்லும் ஆசிரியைகளை கட்டிப்பிடித்து அழுத மாணவிகள்
மாறுதலாகி செல்லும் ஆசிரியைகளை மாணவிகள் கட்டிப்பிடித்து அழுதனர்.;
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் கார்த்திகேயன், புனிதா, ஜெயந்தி, தனலட்சுமி, சுகந்தி ஆகியோர் 6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடம் நடத்தி வந்தனர். இவர்கள் ஒரே நேரத்தில் பணி மாறுதல் பெற்றுக் கொண்டு தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இவர்கள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் கொண்ட பள்ளி மாணவிகள் இவர்களை பிரிய மனம் இல்லாமல் ஆசிரிய, ஆசிரியைகளைக் கட்டிப் பிடித்தபடி அழுது தங்கள் பாசத்தை வெளிப்படுத்தினர். இதனால் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி சோகம் நிறைந்து, பரபரப்புடன் காணப்பட்டது.