மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடக்கிறது

Update: 2022-03-16 18:23 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கமும், முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து மாவட்ட அளவிலான 20-வது ஆண்டு சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டியை வரும் 27-ந்தேதி நடத்த உள்ளனர். ஆண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியிலும், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் ராமநாதபுரம் முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளக்கூடிய அணிகள் தங்களது விவரங்களை 24-ந்தேதிக்குள் 8148259600, 9943755116 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகள் அனைத்தும் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த தகவலை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ரமேஷ்பாபு, சுரேஷ்குமார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்