கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் கடைக்காரர் கைது

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-16 18:20 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடையில் சோதனை செய்தபோது 18 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கடைக்காரர் விழுப்புரம் மாவட்டம் எர்ணணூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 42) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விழுப்புரத்திற்கு கொண்டு செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் 18 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்