அன்னவாசல் பேரூராட்சியில் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Update: 2022-03-16 18:20 GMT
அன்னவாசல்:
அன்னவாசல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை பாக்கியை செலுத்துமாறு, பேரூராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். துண்டு பிரசுரம், ஆட்டோ மூலம் பிரசாரம் மேற்கொண்டும், சிலர் வரி செலுத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம், வரி பாக்கியை வசூலிக்க தனிக்குழு அமைத்து, வீடு மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று, வரி குறித்த விபரத்தை தெரிவிக்கிறது. அவர்களை வரி செலுத்தும்படி அறிவுறுத்துகிறது. இந்த நிலையில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாத வணிக நிறுவனங்களில் நேற்று பேரூராட்சி பணியாளர்கள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்