உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் பச்சிளம் பெண் குழந்தை பிணம்
உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் பச்சிளம் பெண் குழந்தை பிணம் மிதந்தது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சாமனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை பிணம் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாமனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அகிலன் உத்தனப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் குழந்தையை தென்பெண்ணை ஆற்றில் வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.