எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தடுப்பூசி தினம் அனுசரிப்பு
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் தடுப்பூசி திட்டத்தினை கொண்டு செல்வதால் செவிலியர்களின் சேவையை கவுரவப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் டாக்டர்கள் சத்தியமூர்த்தி, பிரீத்தி, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, பெரியசாமி, இளங்கோவன், அப்துல்ரஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.