சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-16 18:16 GMT
புதுக்கோட்டை:
திருச்சி உறையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவர் புதுக்கோட்டையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாதபோது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல் புதுக்கோட்டை வெள்ளனூர் அருகே மேலகரையாம்பட்டியை சேர்ந்தவர் முத்து (67). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்