அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-16 18:45 GMT
திருவையாறு:-

திருவையாறு அருகே நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மற்றொருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வில்லியம் (வயது53) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வில்லியத்தை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்