கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-16 18:30 GMT
கும்பகோணம்:-

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நாகேஸ்வரர் கோவில்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 13-ந் தேதி ஓலை சப்பரத்தில் சாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 

தீர்த்தவாரி

பங்குனி உத்திர நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்